Thursday, January 11, 2007

தமிழரின் நன்றி திருவிழா



"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."

இது நம் அய்யன் திருவள்ளுவனின் வாக்கு.

அந்த வாக்கிற்கு ஏற்ப நாமும் நம் நன்றியை தெரிவிக்கும் விதமாக
அதை மூன்றுநாள் நன்றி திருவிழாவாக கொன்டாடுகிறோம்.
இதை நான் ஒரு கவிதைநடையாக கூறியுள்ளேன்.


தமிழரின் நன்றி திருவிழா
"நன்றி மறப்பது நன்றன்று
ஆம் இது நம் தமிழ் கடவுளின் வாக்கு

எம் தமிழன் நன்றி மறவான்
தம் விழை பயிர் விதைக்க உயிர் கொடுத்தன எம் நிலங்கள்
அதற்கு வாழ்வு கொடுத்தான் கதிரவன்
இவைகளுக்கு நன்றி என்று படைத்தான் பொங்கலென்று
ஆம் பொங்கல் திருவிழா

நன்றி மறப்பது நன்றன்று
ஆம் எம் தமிழன் நன்றி மறவான்
தம் உழவுக்கு தோல்கொடுத்தன எருதுகள்
அதற்கும் நன்றி என்றான் பொங்கலென்று
ஆம் மாட்டு பொங்கல் திருவிழா

நன்றி மறப்பது நன்றன்று
ஆம் எம் தமிழன் நன்றி மறவான்
எம் தமிழ் மொழிக்கு புகழ் சேர்த்தான்
எம் தமிழ் கடவுள் வள்ளுவன்
அதற்கும் நன்றி என்றான்
திருவள்ளுவர் தினம் எனறு."



கிராமங்களில் இந்த திருவிழாவை நாம் மிக சிறப்பாக கொன்டாடுகிறோம்.
ஆனால் இப்பொழுது சிறிது குறைந்திருக்கிறது,அதை நான் எனது கிராமத்தில் கண்டிருக்கிறேன்.அது எதனால் என்பது தெரியவில்லை.அப்பொழுதெல்லாம் எருதுகள் மீது கரும்பு ,கம்பகதிற் மற்றும் பணம் வைத்து கட்டி விரட்டுவார்கள், அதை பிடிப்பதற்கு என்றே ஒரு குழு ஊரை சுற்றி திரியும் ,ஆனால் இப்பொழுது அதுமாதிரியெல்லாம் யாரும் மாட்டை விரட்டுவதில்லை,
ஒருவேளை அவர்களுக்கு விருப்பம் இல்லையோ ? இல்லை இந்த அவசரயுகத்தில் நேரமில்லையா?
இப்பொழுது தமிழர் திருவிழாவின் அடையாளமாக மிக விமரிசியாக கொண்டாடுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.





நகரத்தில் பொங்கல் குக்கரில் வைத்து கொண்டாடுகிறார்கள்.
அரசு விடுமுறை இரண்டுநாள் ஆனால் பெரும்பானமயான தனியார் நிறுவனங்கள் ஒருநாள் தான் விடுமுறை விடுகின்றன.தீபாவளிக்கு கூட இரண்டுநாட்கள் விடுமுறை விடும் நிறுவனங்கள், பொங்கல் மூன்று நாள் தமிழர் திருவிழாவாக இருந்தும் ஒரு நாள் தான் விடுமுறை கொடுக்கின்றனர்.
ஆகயால் நகரத்தில் இருக்கும் மக்கள் நம் தமிழர் திருநாளை பெருவிமரிசியாக கொணடாடுவதில்லை.
இனிமேலாவது நம் திருநாளை வெகுவிமரிசியாக கொண்டாடுவோம்.
தமிழரின் நன்றி திருவிழாவாம் பொங்கல் திருநாளை போற்றுவோம்.


உங்கள் அனைவருக்கும் என் இனிய உள்ளங்கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

3 comments:

Anonymous said...

very useful

Anonymous said...

Theni aadum roja pottakivittathu

பாரதி said...

ayya muthalil ungalukku nanri ,ungalin paarvai ingu pattatharku..

//Theni aadum roja pottakivittathu //
itharku enna artham?