Thursday, December 21, 2006

நான் போற்றும் மூன்று புரட்சியாளர்கள்






இந்த பதிவு " நான் போற்றும் மூன்று புரட்சியாளர்கள்"

இந்த மாபெரும் புரட்சியாளர்களுக்கு என் முதல் வணக்கத்துடன், ஒரு சிறு அறிமுகம் இது.
என்னை கவர்ந்த இந்த மூன்று பேருமே மூன்று வெவ்வேறான இடங்களில் இருந்து வந்தவர்கள் .


முதலாமவர் நமது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

இவரைப்பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்ததே.
"நேதாஜி" என்று நம் மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945). இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அதில் இறக்கவில்லை அதற்கு பின் வெகுகாலம் வாழ்ந்தார் என்று கூறுகிறார்கள்.
"சுதந்திரம் என்பது கேட்டு பெறுவது அல்ல" என்ற கொள்கைக்கு ஏற்றார் போல் ஆயுதம் ஏந்தி போராடியவர். இப்படி போராடிய இந்த வீரரின் கடைசிகாலம் சர்ச்சைக்குள்ளானது மிகவும் வேதனைக்குரியது.
இந்த மாவீரக்கு எனது வீரவணக்கம்.


இரண்டாமவர் இன்றைய 'நேதாஜி'மாவீரர் வே.பிரபாகரன்.

தமிழீழத்தின் வல்வெட்டிதுறையில் நவம்பர் 26, 1954, பிறந்த பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல் தமிழ் புதுப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். மே 5, 1976ல் தமிழ் புதுப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

இவரை தமிழ்தாயின் இளையமகன் என்றே கூறலாம்.
இவ்வளவு குறைந்த வயதில் ஒரு விடுதலை இயக்கத்தை ஆரம்பித்து தன் இனத்துக்காக போராடும் உன்னதமான மாவீரன்.தமிழரை உலக அரங்கில் தலை நிமிர வைத்த ஒரு உயர்ந்தவன்.
இந்த வீர தமிழனுக்கு எனது இந்த பதிவின் மூலம் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


மூன்றாமவர் சே குவேரா.

"சே குவேரா "என்பது பெயர்ச்சொல் அல்ல விளிச்சொல்லும் அல்ல,அது ஒரு மந்திரம். சோர்ந்த மனதில் ஆற்றலைப் பாய்ச்சித் தளர்ந்த நரம்புகளில் உயிரை ஊட்டும் மந்திரம் அது.
தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவில் 1928 ஜூன் 14 பிறந்து கியுபாவுக்காக போராடி விடுதலை அடைந்து அமைச்சர் பதவி கிடைத்தும் அதை உதறித்தள்ளி விட்டு மற்றொறு நாட்டின் அதாவது பொலிவிய புரட்சியாளர்களுக்காக போராடி தன் இன்னுயிரை விட்டவர்.தான் ஒரு மருவத்துவராக இருந்தும் அந்த தொழிலை செய்யாமல் புரட்சியாளர்களுக்காக தன் கூடவே பிறந்த காச நோய் பற்றி கவலைப்படாமல் போராடியவர்.
இந்த மானுடப்பிரவாகத்தில் மிக அரிதாகத் தோன்றுகிற மாமனிதர்களில் ஒருவர் சே குவேரா.
இந்த மாபெரும் புரட்சியாளனுக்கு எனது வீர வணக்கம்

5 comments:

Jay said...

எனக்கு பிடித்தமானர் நடுவில் இருப்பவர்.

வெற்றி said...

பாரதி,
நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று சுந்தந்திரப் போராட்ட வீரர்களையும் எனக்கும் பிடிக்கும். இவர்களுடன் நெல்சன் மண்டேலா இன்னும் சிலர்.

இவர்கள் தமது மக்களின் விடிவுக்காக செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், இன்னல்கள், அவமானங்கள் போன்றவற்றை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மற்றையவர்களின் வாழ்விற்காக தமது வாழ்வையே அர்ப்பணிப்பவர்கள் தெய்வத்திலும் மேலாக வைக்கப்படுவர் என்கிறது தமிழ்வேதம்.

இதில் ஒரு சுவாரசியமான விடயமென்னவென்றால், இப் புரட்சி வீரர்களை அவர்களின் வாழ்க்கைக் காலத்தில் உலகம் அவ்வளவாக கண்டு கொள்ளாது. அவர்களின் வாழ்க்கைக்குப் பின்னால் தான் ஆகா, ஓகோ என்று புகழும் உலகம்.

பாரதி said...

நன்றி வெற்றி உங்களின் கருத்துக்கு.
//மற்றையவர்களின் வாழ்விற்காக தமது வாழ்வையே அர்ப்பணிப்பவர்கள் தெய்வத்திலும் மேலாக வைக்கப்படுவர் என்கிறது தமிழ்வேதம். //

இது முற்றிலும் உன்மை.

//இப் புரட்சி வீரர்களை அவர்களின் வாழ்க்கைக் காலத்தில் உலகம் அவ்வளவாக கண்டு கொள்ளாது.//
இதை சொல்லும்போது என் நண்பன் ஒருவன் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்வான்
'இந்த உலகம் எப்பவுமே இப்படித்தான் முன்னால் போனால் கடிக்கும் ,பின்னால் வந்தால் மிதிக்கும்' இதுதான் எனக்கு ஞாபகம் வருது.
எப்பொழுதுமே இந்த உலகம் புரட்சியாளர்களை அந்தக் காலக்கட்டங்களில் மதித்ததில்லை

அன்பு. பாலகுமார் said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று சுந்தந்திரப் போராட்ட வீரர்களையும் எனக்கும் பிடிக்கும்.

Unknown said...

எனக்கும் இந்த மூவரையும் பிடிக்கும் அத்துடன் நெல்சன் மண்டேலாவையும் பிடிக்கும்