Monday, February 19, 2007

சாதித்தது பெரியார் திராவிடர் கழகம்.



கோவையில் ஆரம்பகட்டத்தில் சேலம் இரயில்வே கோட்டம் உருவாக போரட்டம் நடத்தியவர்கள்,தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள்தான்.
இவர்கள் கோவையில் எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் முன்னனியில் இருந்து போரட்டம் நடத்துபவர்கள்,அப்பொழுது இவர்கள் மட்டும் இரயில்வே துறைக்கு எதிராக போரட்டம் நடத்தி சிறை சென்றார்கள்.
அன்று அவர்களின் போரட்டத்தை கானாத கோவை மக்கள் இன்று சேலம் கோட்டம் உருவாக ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி இருக்கிறார்கள். இன்று 20தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றினைந்திருக்கிறார்கள். இது வரவேற்கப்பட வேன்டிய விசயம். ஏனென்றால் இதில் ஒன்றினைந்திருப்பது அதிமுக,திமுக என அனைத்துக்கட்சிகளும் மற்றும் சில பொது அமைப்புகளும் இதில் இனைந்து உள்ளன.
ஒட்டுமொத்த கோவைமக்களும் இதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் சேலம் கோட்டம் உருவாவது உறுதியாகிறது மற்றும் இந்த கோட்டத்தில் கோவை,திருப்பூர் இனைவதும் உறுதியாகிறது.
கேரள முதல்மந்திரி அவர்கள் பாலக்காடு கோட்டத்தை பிரிக்க கூடாது என்று மத்திய அரசை கேட்டு கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றும் முக்கியமாக வருமானம் அதிமாக வரக்கூடிய கோவை, திருப்புர் இரன்டையும் சேலம் கோட்டத்திலயே சேர்க்க வேண்டும் என்றும் இந்த பந்த் நடக்க உள்ளது.
பள்ளிகள் ,கல்லூரிகள்,வனிக நிறுவனங்கள்,தொழிற் நிறுவனங்கள் எதுவும் செயல்படாது.
பஸ்,ஆட்டோ என்று எதுவும் ஓடாது.இது முழுக்க முழுக்க கோவை மக்களின ஆதரவுடன் நடக்கவுள்ள்து.
இப்படி ஒருத்தர் மட்டுமே இழுத்த தேரை ,இன்று ஊர்கூடி இழுக்க வைத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் பங்கு மகத்தானது.
அவர்கள்தான் இப்பொழது அனைவரயும் இனைத்தது.
இந்த பந்த அவர்கள் முன்னிலையே அனைத்து மக்கள் ஆதரவுடன் நடக்க உள்ளது.
இப்பொழுது அனைத்து சமூக அமைப்புகளும் அவர்களின் படிப்பகத்தை மொய்க்கிறார்கள்.
நாங்களும் இதில் கலந்துகொள்கிறோம் என்று அறிவித்துவிட்டு செல்கிறார்கள்.
ஆகையினால் இந்த போரட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.
சேலம் கோட்டம் உருவாவது உறுதி அதில் கோவை,திருப்பூரும் இனைவதும் உறுதி.
சாதித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

Thursday, January 11, 2007

தமிழரின் நன்றி திருவிழா



"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."

இது நம் அய்யன் திருவள்ளுவனின் வாக்கு.

அந்த வாக்கிற்கு ஏற்ப நாமும் நம் நன்றியை தெரிவிக்கும் விதமாக
அதை மூன்றுநாள் நன்றி திருவிழாவாக கொன்டாடுகிறோம்.
இதை நான் ஒரு கவிதைநடையாக கூறியுள்ளேன்.


தமிழரின் நன்றி திருவிழா
"நன்றி மறப்பது நன்றன்று
ஆம் இது நம் தமிழ் கடவுளின் வாக்கு

எம் தமிழன் நன்றி மறவான்
தம் விழை பயிர் விதைக்க உயிர் கொடுத்தன எம் நிலங்கள்
அதற்கு வாழ்வு கொடுத்தான் கதிரவன்
இவைகளுக்கு நன்றி என்று படைத்தான் பொங்கலென்று
ஆம் பொங்கல் திருவிழா

நன்றி மறப்பது நன்றன்று
ஆம் எம் தமிழன் நன்றி மறவான்
தம் உழவுக்கு தோல்கொடுத்தன எருதுகள்
அதற்கும் நன்றி என்றான் பொங்கலென்று
ஆம் மாட்டு பொங்கல் திருவிழா

நன்றி மறப்பது நன்றன்று
ஆம் எம் தமிழன் நன்றி மறவான்
எம் தமிழ் மொழிக்கு புகழ் சேர்த்தான்
எம் தமிழ் கடவுள் வள்ளுவன்
அதற்கும் நன்றி என்றான்
திருவள்ளுவர் தினம் எனறு."



கிராமங்களில் இந்த திருவிழாவை நாம் மிக சிறப்பாக கொன்டாடுகிறோம்.
ஆனால் இப்பொழுது சிறிது குறைந்திருக்கிறது,அதை நான் எனது கிராமத்தில் கண்டிருக்கிறேன்.அது எதனால் என்பது தெரியவில்லை.அப்பொழுதெல்லாம் எருதுகள் மீது கரும்பு ,கம்பகதிற் மற்றும் பணம் வைத்து கட்டி விரட்டுவார்கள், அதை பிடிப்பதற்கு என்றே ஒரு குழு ஊரை சுற்றி திரியும் ,ஆனால் இப்பொழுது அதுமாதிரியெல்லாம் யாரும் மாட்டை விரட்டுவதில்லை,
ஒருவேளை அவர்களுக்கு விருப்பம் இல்லையோ ? இல்லை இந்த அவசரயுகத்தில் நேரமில்லையா?
இப்பொழுது தமிழர் திருவிழாவின் அடையாளமாக மிக விமரிசியாக கொண்டாடுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.





நகரத்தில் பொங்கல் குக்கரில் வைத்து கொண்டாடுகிறார்கள்.
அரசு விடுமுறை இரண்டுநாள் ஆனால் பெரும்பானமயான தனியார் நிறுவனங்கள் ஒருநாள் தான் விடுமுறை விடுகின்றன.தீபாவளிக்கு கூட இரண்டுநாட்கள் விடுமுறை விடும் நிறுவனங்கள், பொங்கல் மூன்று நாள் தமிழர் திருவிழாவாக இருந்தும் ஒரு நாள் தான் விடுமுறை கொடுக்கின்றனர்.
ஆகயால் நகரத்தில் இருக்கும் மக்கள் நம் தமிழர் திருநாளை பெருவிமரிசியாக கொணடாடுவதில்லை.
இனிமேலாவது நம் திருநாளை வெகுவிமரிசியாக கொண்டாடுவோம்.
தமிழரின் நன்றி திருவிழாவாம் பொங்கல் திருநாளை போற்றுவோம்.


உங்கள் அனைவருக்கும் என் இனிய உள்ளங்கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்