தலித்தை ஆதரிப்பது மட்டும் சாதி அரசியல் ஆகாதா?
ஆர்குட்டில் சாதியை எதிர்ப்பது பற்றியான விவாதத்தில் ஒரு அய்யங்கார் குழுவில்(community ) இருந்த நன்பரும் உரையாடினார் அதற்கு என்னுடைய பெரியாரியல்வாதி நன்பர் ஒருவர் நீங்கள் எப்படி இதுப்பற்றி பேசலாம? அய்யங்கார் குழுவில் இருந்து கொன்டு என்று கேட்டார்.எனது நன்பர் தலித் குழுவில் இருந்தார்,அதற்கு அந்த பார்ப்பன நன்பர் நீங்கள் மட்டும் தலித் குழுவில் இருக்கலாமா? அது மட்டும் சாதி வெறி இல்லையா என்று கேட்டார்.
அந்த பார்ப்பன சாதி வெறியர் கேட்ட கேள்விக்கு இங்கு பதில்.
தலித் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை ஆதரிப்பது மட்டும் சாதி அரசியல் ஆகாதா?
பேராசிரியர் சுப வீரபான்டியன் அவர்கள் எழுதிய "குடும்பமும் அரசியலும்" என்ற நூலில் இதற்கு பதில் அளிக்கிறார் இப்படி,
ஒரு நாளும் ஆகாது . சாதிய அமைப்பு நிலைப்பதாலும்,நீடிப்பதாலும்,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும் தொடருமேயன்றி,ஒரு சிறு நன்மையும் அவர்களுக்குக் கிடையாது.சாதிய அடுக்குமுறையை நெஞ்சில் நிறுத்தி எண்ணிப் பார்த்தால் மேலும் சில உண்மைகள் நமக்கு விளங்கும்.
சாதி அடுக்கின் மேல்தளத்தில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு,சாதியம் எல்லாவிதமான சமூக உயர்வையும் பெற்றுத் தருகின்றது.சாதி,அவர்களைப் பாதுகாக்கவும் செய்கினறது. சாதி அமைப்பினால் அவர்களுக்கு அனைத்தும் நன்மையே தவிர,ஒரு கேடும் இல்லை.
மற்ற சாதியினருக்கு,அவரவர் எந்த அடுக்கில் உள்ளனர் என்பதையொட்டி,நன்மைகளும்,கேடுகளும் கல்ந்து கிடக்கும்.பார்ப்பன்ர் அல்லாத முற்ப்படுத்தப்பட்ட சாதியினர்,பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என அச்சாதியினரை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
தாழ்த்தப்பட்ட மக்களே சாதி அடுக்கின் கீள்த்தளத்தில் உள்ளனர்.சாதியின் பெயராலேயே இவர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.சாதிய அமைப்பே,இவர்களுக்கு எல்லாவிதமான சமூக இழிவுகளையும் சுமத்தியுள்ளது. இவர்களில் மிக மிகப் பெருபான்மையோர்,பொருளாதாரத்தில் நலிந்து கிடப்பதற்கு சாதியே காரணமாக உள்ளது. சாதி அமைப்பினால்,இவர்களுக்கு அனைத்தும் கெடுதலே தவிர,ஒரு நன்மையும் இல்லை.
இப்போது சொல்லுங்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று யார் விரும்புவார்கள்?
சாதி ஒழிவதால் யாருக்கு நன்மை?
ஆகவே,தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவான நம் செயல்களும்,போரட்டங்களும் சாதி அரசியல் ஆகாது. மாறாக,சாதி ஒழிப்பு அரசியலாகவே அது அமையும்
இது அந்த பார்ப்பன சாதி வெரியனுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.!!

